BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார பகுதியில் கோடை சீசனை முன்னிட்டு தேங்காய் உடைக்கப்பட்டு, தேங்காய் எண்ணெய் தயாரிக்க, பருப்புகள் காயவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார பகுதியில் கோடை சீசனை முன்னிட்டு தேங்காய் உடைக்கப்பட்டு, தேங்காய் எண்ணெய் தயாரிக்க, பருப்புகள் காயவைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேங்காய் பருப்புகள் மூலம் பொதுமக்கள் எவ்வாறு நன்மை பெறுகின்றனர்? என்பது குறித்து மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் பருப்பு எண்ணெய் ஆட்டும் உரிமையாளர்கள் கூறியதாவது:

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உடல் சூடாகாமல் எப்பொழுதும் சமமான வெப்ப நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நன்மைகளை தருகின்றது. இதனை அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தலாம். ஈறுகளில் மசாஜ் செய்தால் பற்கள் பள பளவென்று தேங்காய் எண்ணெய்யை தினமும் பற்கள் மற்றும் மின்னும். நாள்தோறும் இரவுகளில் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் முகம் ஜொலிக்கும். அது மட்டும் இல்லாமல் முகத்தில் ஏற்படும் வெடிப்புகள், வறட்சிகள் வராமல் தடுக்க உதவும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் குடித்தால் உடல் எடை குறையுமாம். உடலில் தேவையில்லாமல் சேரும் கொழுப்புகளை கரைத்து கல்லீரல் வீக்கம் அடையாமல் தடுக்கின்றது. தினமும் முடிகளில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வருவதால் வேர்கள் ஊக்கம் பெற்று கூந்தல் அடர்த்தியாக வளரவும், முடி கொட்டுவதையும் தடுக்கின்றது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )