BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஈரோடு  பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம் பவானி அந்தியூர் பிரிவு ரோட்டில் பவானி வட்டார கைத்தறி ஜமக்காளம், பெட்ஷீட் நெசவாளர் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் (ஏஐடியுசி) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டு நூல் விலை வரலாறு காணாத உயர்வு ஏற்பட்டு உள்ளதை குறைத்திட வேண்டும். 28 ஆண்டுகளாக மாற்றி நிர்ணயிக்காமல் உள்ள கைத்தறி நெசவாளர்களின் அடிப்படை ஊதியத்தை மாற்றி உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் சின்னசாமி, செயலாளர் சித்தையன் மற்றும் அல்லிமுத்து, ராஜம்மாள், கோவிந்தன், பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )