மாவட்ட செய்திகள்
தஞ்சையில் என் ரூட் தொழில்நுட்ப மையத்தில் பிரிட்ஜ் பாரத் மற்றும் லைப் அகாடமி சார்பில் குழந்தைகள் நல குழுவுடன் இணைந்து என் ரூட் சக்தி விருதுகள், 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சையில் அமைந்துள்ள என் ரூட் தொழில்நுட்ப மையத்தில் பிரிட்ஜ் பாரத் மற்றும் லைப் அகாடமி சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் நல குழுவுடன் இணைந்து என் ரூட் சக்தி விருதுகள், நிர்வாக திறன் விருதுகள், சமூகப் போராளி விருதுகள் மற்றும் சிறந்த பணியாளர் விருதுகள் 30 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்விருதுகளை தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாட்டு மேலாண்மை நிறுவன இயக்குனர் முனைவர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் பிரிட்ஜ் பாரத் முதன்மை செயல் அலுவலர் கர்னல் திரு. செல்வகுமார் மற்றும் டெல்டா புட்ஸ் நிர்வாக இயக்குனர் முனைவர் பர்வின் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

நிர்வாக திறன் விருதுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவலிப்ரியா, மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய நீதிபதி திருமதி சுதா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திருமதி. ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திருமதி. விஜயப்ரியா, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திருமதி. இராஜேஸ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

சக்தி விருதுகள் தொழிலதிபர் திருமதி. க்ரித்திகா ராதாகிருஷ்ணன், கர்னல் திருமதி. அம்பிகா, டாக்டர். வள்ளிநாயகி வாஞ்சிலிங்கம், வழக்கறிஞர் திருமதி. இன்னிசை, தமிழ் பல்கலைக்கழக பேராசியியர் முனைவர். கற்பகம், காவல் ஆய்வாளர் திருமதி. சந்திரா, தொழில் முனைவோர் திருமதி. ஜாய் ராயன் மெக்கானிக் திருமதி. ஜெயராணி, சமூக சேவகர்கள் திருமதி. ஸ்டெல்லா புஷ்பராணி, திருமதி. பொன்னி உதயகுமார் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

சமூகப் போராளி விருதுகள் சிறந்த கள பணியாற்றிவரும் திருமதி. செல்வராணி, திருமதி. லதா, திருமதி. மாலதி, திருமதி. சுஜாதா, திருமதி. சாவித்திரி, திருமதி. கலா குபேந்திரன் முனைவர். சதீஷ்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்திய குழந்தை வளர்ச்சி திட்டம் மற்றும் மகளிர் திட்டம் சார்ந்த சிறந்த பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் முனைவர். உஷாநந்தினி விஸ்வநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி. இராஜேஸ்வரி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், ரோட்டரி திவாஸ் நிறுவனத்தலைவர் திருமதி. ஆனந்தி முரளி, தலைவர் லட்சுமிபாலா சரவணன், வி பெண்கள் அமைப்பு தலைவர் திருமதி. லதா, குடியிருப்போர் நலசங்க கூட்டமைப்பு இணைச்செயலாளர் திருமதி. விஜயலக்ஷ்மி பாரதி, இன்னர்வீல் சங்க தலைவர் தேர்வு டாக்டர் சோபியா, பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக என் ரூட் குழும நிறுவனர் விங் கமாண்டர் திரு. ஜெயக்குமார் வரவேற்று விளக்க உரை ஆற்றினார். இணை நிறுவனர் திருமதி. தீபா ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
