BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருச்சி லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருச்சி மாவட்டம்,
லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் திருத்தவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. இக் கோயில் எழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்று இக் தலத்திற்கு திருத்தவத்துறை என்று அழைக்கப்படுகிறது. இக் கோயிலின் பங்குனித் திருவிழாவின் 9ம் நாள் சுவாமி எழுந்தருளினார். கலை நயமிக்க 75அடி உயரமுள்ள மிகப் பழமையான மரத்தாலான தேர் ஆகும். இத் தேரில் எழு அடுக்குகள் உள்ளது. இந்த ஏழு அடுக்குகளில் கலை நயமிக்க புராணச் செய்திகளை தாங்கிய அற்புதமான சிற்பங்கள் உள்ளன. இத் தேருக்கு 9 அடி உயரமுள்ள நான்கு சக்கரங்களும், 7அடி உயரமுள்ள இர’ண்டு நடுச்சக்கரங்களும் ஆக ஆறு சக்கரங்களும் இத் தேரினை தாங்கி நிற்கின்றது.இத் தேர் 1918 ம் ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்டது.

இத் தேரின் திருவீதி உலா கடந்த 1936 ம் ஆண்டு பின் 75 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர் புதுபிக்கப்பட்டு கடந்த 2011 ம் ஆண்டு முதல் பங்குனிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடைபெறுகிறது. நிகழாண்டில் இத் தேரோட்ட விழா கடந்த 8ம் தேதி தொடங்கி, தொடர்ந்து தினசரி காலை பல்லாக்கும், இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடும் நடைபெற்றது. விழாவின் 9ம் நாளான இன்று திருத் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இத் தேரோட்டத்தில் 2 பொக்லின் இயந்திரம் உதவியுடன் லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் லால்குடி நகராட்சி தலைவர் துரைமாணிக்கம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இதில் சுவாமிகள் விநாயகர், சுப்ரமணியர் , சோமாஸ்கந்தர், பெருந்திரு பிராட்டியார், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனித் தனி தேரில் அமர்ந்திருந்த பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த 5 தேர்களும் மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இத் தேரோட்ட விழாவில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ் , செயல் அலுவலர் பெ. ஜெய்கிஷன் மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )