BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அதிமுக திட்டங்களுக்கு லேபில் ஓட்டுவதுதான் திமுகவின் வேலை – அமைச்சர் ஜெயக்குமார்.

கடந்த புதன்கிழமையன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த போது அதிக அளவில் கூட்டம் கூடியது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் நடராஜன் ,மாவட்ட செயலாளர் பரஞ்சோதி உள்ளிட்ட 10 பேர் மீது கொரோனா பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ், அதிக அளவில் கூட்டம் கூடியது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கும் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்
3வது முறையாக இன்று காலை பத்து முப்பது மணி அளவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்திட வந்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உடன் வந்தனர்.
கடந்த இரண்டு முறையும் கையெழுத்திட வரும்பொழுது ஏராளமான கட்சியினர் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக வழக்கு பதிவு செய்த நிலையில் இன்று கட்சியினரை யாரையும் அனுமதிக்கவில்லை. மேலும், காவல் நிலையத்தை சுற்றிலும் பலத்த காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்கள் பேட்டியளித்த ஜெயக்குமார்

வழக்கை பற்றி எனக்கு தெரியாது ஒரு கட்சி என்றால் கட்சியின் முன்னோடிகள் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் என்றால் கூட்டம் கூடுவது காலம் காலமாக நடந்து வருவது தான். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதி சுமார் பத்தாயிரத்திற்கு மேல் கூட்டிய போது கொரோனா வராதா என கேள்வி எழுப்பினார்.

எங்கள் தொண்டர்கள் எழுச்சியோடு வருவது பொறுத்துக் கொள்ள முடியவில்லை இது அரசியல் காழ்ப்புணர்ச்சி.

கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என பாராளுமன்றத்தில்
டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி உள்ளார் என கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்

அங்கு வலியுறுத்துவார்கள் இங்கே கவர்னரை முதல்வர் பார்ப்பார் இதுதான் அவர்கள் செயல்.
கவர்னர் அவர் செயலை அரசியலமைப்பின்படி செய்கிறார்.

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை இவர்கள் நிறைவேற்றப் போவதில்லை
வழக்கம்போல் அல்வா கொடுக்கும் வேலையை தான் இவர்கள் செய்வார்கள்.
எங்கள் ஆட்சியில் செய்யப்பட்ட வேலைக்கு லேபிள் ஒட்டும் வேலையை தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )