மாவட்ட செய்திகள்
திருப்பூர் 900 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு அர்ஜுனேஸ்வரர் திருக்கோவில் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் ஊராட்சி பகுதியில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு அர்ஜுனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.


இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலாகும். திருமண தடை நீக்கும் திருத்தலம் மற்றும் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. இக்கோவிலில் பஞ்ச பாண்டவர்கள் வந்து வணங்கியதாக கருதப்படும் இக்கோவிலில்,பங்குனி உத்திரத் திருநாளான இன்று, முருகன் சன்னதியில் உள்ள மூலவருக்கு திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், போன்ற பல்வேறு அபிஷேகப் பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
