BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் அருள்மிகு விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா.

தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் அருள்மிகு விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர் பெருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தருமபுரி அடுத்த அன்னசாகரத்தில் பிரசித்திபெற்ற சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சியாக கொண்டாடபடுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பினால் திருவிழா நடைபெறவில்லை. அதனையடுத்து இந்தாண்டு கடந்த 12 ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவில் கடந்த 5 தினங்களாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து பங்குனி உத்திரமான இன்று முக்கிய நிகழ்வாக பெண்கள் மட்டுமே வடம் பிடித்து தேரை இழுக்கும் திருவிழா நடைபெற்றது.


முன்னதாக அலங்கரிக்கபட்ட வினாயகர் மற்றும் சிவசுப்பிரமணிய சுவாமிகளை கோவிலிலிருந்து பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக வந்து தேரில் வைத்தனர். அதனையடுத்து முக்கிய நிகழ்வாக பெண்கள் மட்டுமே அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் பெண்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் உப்பு, மிளகு மற்றும் நவதாணியங்களை தேர் மீது வீசினர்.

இத்திருவிழாவில் தருமபுரி கிருஷ்ணகிரி, மேட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசணம் செய்தனர். இதனை தொடர்ந்து திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் சார்பில் அன்னதானம் வழங்கபட்டது. இந்த திருவிழாவில் எந்தவித குற்றசம்பவங்கள் நடைபெறாவண்ணம் காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமையில் 100 க்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )