BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லியநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கும் பணியினை தஞ்சை மேயர் ஆய்வு செய்தார்.

திருவையாறு அடுத்த வில்லியநல்லூர், செம்மங்குடி கொள்ளிடம் ஆற்றில் 3 ஆள்துளை கிணறு அமைக்கப்பெற்று தஞ்சை ஸ்மார்ட் சிட்டிக்கு குடிநீருக்காக பயன்படுத்துவதற்கு கடந்த 2018ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது இதில் இரண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பெற்று சுமார் 65% மற்றும் 92 சதவீதம் பணிகள் நிறைவுபெற்று உள்ள நிலையில் சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன் பெயரில், இயற்கை இடர்பாடுகளினால் காலதாமதம் ஏற்பட்டது. பணிகள் தொடர்ந்து நடைபெற்ற தஞ்சை மேயராக பொறுப்பேற்றுள்ள சன் ராமநாதன் அவர்கள் இன்று பணிகளை துரிதப்படுத்துவதற்காக ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வினை மேற்கொண்ட பொழுது செம்மகுடியில் உள்ள ஆழ்துளை கிணறு முழுமை பெற்று நீர் எடுக்கும் அளவிற்கு உள்ளது.

வில்லியநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு ஆனது 62 சதவீதம் நிறைவு பெற்ற நிலையில் பணி தேக்கம் அடைந்து உள்ளது அவற்றை துரிதப்படுத்தி வரும் காலங்களில் கோடை காலத்தை சமாளிப்பதற்கு தண்ணீர் தஞ்சை மாநகரத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளார் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேல் இத்திட்டத்தின் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதனால் குடிநீர் தட்டுப்பாடு தஞ்சை மாநகரத்திற்கு ஏற்படாது என தெரிவித்தார்.


தஞ்சை சிறப்பு நிலை நகராட்சியில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையைக் கொண்டு 2020- 2050 மக்கள்தொகை கருத்தில்கொண்டு தஞ்சை மாநகராட்சி 51 வார்டுகளையும் 26 குடிநீர் வழங்கல் மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது.26 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை கொண்டு உள்ளன. திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து நிறுவப்பட்டுள்ள கிணற்றில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் ஏழு எம்எல்டி நீர் தினமும் உந்தப்பட்டு நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 89 லிட்டர் வீதம் வழங்கப்படுகிறது. மாநகராட்சியானது வளர்ந்து வருவதனால் தேவையை சமாளிப்பதற்கு ஏற்கனவே நீர் உறிஞ்சு கிணறு 1975ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றில் நீரானது நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

அதனால் மேலும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக குடிநீர் வழங்கல் துறை மூலம் குடிநீர் அபிவிருத்தித் திட்டங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் 1 மற்றும் 2 அழகு மத்திய அரசுகள் ஸ்மார்ட் திட்டத்தின் பணி குடிநீர் அபிவிருத்தி பணிகள் 7300 மற்றும் 11, 875 லட்சங்களுக்கு 2018ஆம் ஆண்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய இரண்டு குடி நீர் சேகரிப்பு கிணறுகள் குழாய் தாங்கும் பாலம் 1750 மீட்டர் மின் மோட்டார்கள், இணைப்பு குழாய்கள் 11026 மீ, 20 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு தொட்டி மற்றும் மின் அறை பணிகள் செயலாக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 திட்டத்தில் 914 மில்லி மீட்டர் விட்டமுள்ள நீர்உந்து குழாய் 19500 மீட்டர் நீளம் அமைத்தல் 11 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்பு பூஸ்டர் தொட்டி, மின் அறை, மின் மோட்டார்கள், 26 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 18, 418 மீட்டர் நீளம் டி ஐ பிரதான குழாய் அமைத்து பின் 35692 மீட்டர் நீளம் டி ஐ பகிர்மான குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 24 மாத கால ஒப்பந்தத்துடன் துவங்கப்பட்டது .

இதுவரையில் 65% மற்றும் 92 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன பணிகள் தொடர்ந்து செயலாக்கத்தில் உள்ளது கொள்ளிடம் கரையோர பொதுமக்களின் ஆட்சேபினையினால் நீர் சேகரிப்பு கிணறு அதனை சார்ந்த நடைபாலம் 750 மீட்டர் ஒரு எண்ணிக்கையை முடிக்க இயலாமல் நிலுவையில் உள்ளது பல்வேறு இயற்கை இடர்பாடுகளும் மற்ற பணிகள் முடிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது இரண்டு கிணறுகளும் முடிக்கும் தருவாயில் மக்களுக்கு தேவையான இத்திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் மாநகர மக்கள் நாள் ஒன்றுக்கு நபர் ஒன்றுக்கு 135 லிட்டர் முழுமையாக 30 வருடங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தஞ்சை மாநகரம் காட்சியளிக்கும்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )