BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் குண்டம் நாளான நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தால், இந்த விடுமுறை பொருந்தாது. முன்கூட்டியே தேர்வுகள் அறிவித்தபடி நடக்கும்.

மேலும் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கல்லூரிகளில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது.

இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் வரும் 26 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )