BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வடகரை ஊராட்சியில் இலவச இருதய பரிசோதனை, பொதுமருத்துவம், கண் பரிசோதனை முகாம்.

வடகரை ஊராட்சி திமுக, சென்னை சோசியல், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கங்கள், அப்போலோ மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, மஹாவீர் இன்டர்நேஷ்னல் சென்னை மெட்ரோ, ரெட்ஹில்ஸ் நண்பன் இணைந்து இலவச இருதய பரிசோதனை, பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம் வடகரை ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ந.ஜானகிராமன் தலைமையில் நடைபெற்றது.

புழல் ஒன்றியச் செயலாளர் நா.ஜெகதீசன், புழல் ஒன்றிய பெருந்தலைவர் தங்கமணி திருமால், முதல் நிலை ஆளுநர் பி.வி.ரவீந்திரன், ஒன்றியக் கவுன்சிலர் ப.சிவக்குமார், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆஷா கல்விநாதன் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.

மாவட்டத் தலைவர் ஜி.பாலாஜி, சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் நண்பன் எம்.அபுபக்கர், சேவை திட்ட இயக்குநர் கோகுல் எஸ்.வைதீஸ்வரன், இணைச் செயலாளர்கள் மார்ட்டின், பயாஸ் உசேன், வழக்கறிஞர் பிரதீப், ஹேமந்த், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம், நிர்வாகி நாகராணி, இணைச் செயலாளர் சிலம்பரசன், தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் மு.பீலிக்கான், மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை மெட்ரோ திலீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் வழக்கறிஞர் திராவிட டில்லி, கந்தசாமி, புழல் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் செ.யுவராஜ், ஏ.டேவிட், மனோதீபன், புள்ளிலைன் ஊராட்சி செயலாளர் ஜி.தினேஷ், ஆர்.டி.வெங்கட், பக்கிரி, விஜயகுமார், தனசேகர், கதிர், இளையராஜா, வெற்றி, திருமாவளவன், கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்போலா மருத்துவமனை சார்பில் அனந்தலட்சுமி – ஜெயக்குமார் குழுவினர் 200 பேருக்கு உயரம், எடை, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, இருதயம் தொடர்பான இசிஜி, எஃகோ கார்டியோ ஆகிய பரிசோதனைகளும் இலவசமாக பார்க்கப்பட்டது.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, மஹாவீர் இண்டர்நேஷ்னல் சென்னை மெட்ரோ இணைந்து 200 பேருக்கு இலவச கண் பரிசோதனையும் 79 பேருக்கு இலவச கண் கண்ணாடி, 30 பேர் கண் ஆபரேஷனுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )