மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி – துலுக்கப்பட்டி புதிய இரட்டை இரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் இன்று ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி – துலுக்கபட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே 33 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை அகல ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமையன்று இன்று தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு நடத்தினார்.

கோவில்பட்டியிலிருந்து மோட்டார் டிராலி மூலம் ஆய்வை துவக்கிய அவர் வழியில் சிறிய, பெரிய பாலங்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே கேட்டுகள், புதிய இரட்டை ரயில் பாதை வலது மற்றும் இடது பக்க வளைவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.


அவருடன் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட இயக்குனர் கமலாகர ரெட்டி, ரயில்வே கட்டுமான முதன்மை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
