BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டில் நீண்ட நாட்கள் வாடகை செலுத்தாமல் இருந்த கடைகளுக்கு சீல் வைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பல வகை காய் பழங்கள் வைத்து வியாபாரம் செய்யும் கடைக்காரர்கள் நீண்ட நாட்களாக வாடகை பாக்கி செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர்.இது குறித்து நகராட்சி சார்பில் பல முறை அறிவிப்பு விடுத்தும், எச்சரிக்கை செய்தும் வாடகை பாக்கி செலுத்த யாரும் முன்வரவில்லை.இதனையடுத்து ஒட்டன்சத்திரம் காய், கனி மார்கெட்டில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ஆணையாளர் தேவிகா நேரில் ஆய்வு செய்து கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் நகர்ப்பகுதியில் நடப்பாண்டிற்கான சொத்து வரி ,காலி மனை இட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, மார்க்கெட் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கான வாடகை பாக்கி, நிலுவையில் நடப்பாண்டிற்கான கேட்பு தொகையை உடனடியாக செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் தேவிகா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிகழ்வில் உடன் நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர், மேலாளர் உமா காந்தி, கணக்காளர் சரவணன், இளநிலை உதவியாளர் ஈஸ்வரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இருந்தார்கள்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )