BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையால் நனைந்து சேதம், விவசாயிகள் 15 நாட்களாக காத்திருப்பு.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்,
இந்நிலையில் தஞ்சையை அடுத்த கரந்தை பூக்குளம் பகுதியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வெயிலிலும் மழையிலும் நனைந்து வீணாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது,

கொள்முதல் செய்யப்பட்ட நெல் குடோனிற்கு கொண்டு செல்லாமல் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது, மேலும் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லிற்கு இடப் பற்றாக்குறையால் ஆற்றின் கரையோரங்களில் நெல்லைக் கொட்டி சுமார் 15 நாட்களாக காத்திருக்கும் அவல நிலையும் உள்ளது, நெல் கொள்முதல் செய்ய ஆட்கள் பற்றாக்குறை என்று கூறப்படுகிறது,

இது குறித்து விவசாயிகள் கூறும்போது உடனடியாக அரசு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு கொண்டு செல்ல வேண்டும், விவசாயிகளிடமிருந்து நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )