மாவட்ட செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில்
மஞ்சள் தாலி கயிறுடன் நின்ற
இந்து மக்கள் கட்சியினரால் பரபரப்பு
காதலர்களை திருப்பி அனுப்பிய போலீசார்.
தஞ்சாவூர், பிப்.14
இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. காதலர் தினத்தையொட்டி சுற்றுலா தலமான தஞ்சை பெரிய கோவிலுக்கு காதலர்கள் வந்தால் அவர்களது கையில் மஞ்சள் கயிற்றை கொடுத்து தாலி கட்ட வைப்போம் என இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ் தலைமையில் நிர்வாகிகள் மஞ்சள் கயிறுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அப்போது போலீசார் பெரியகோவிலுக்கு வரும் காதலர்களை நுழைவு வாயில் முன்பே தடுத்து நிறுத்தி முன்னெச்சரிக்கையாக அவர்களை வெளியே அனுப்பி வைத்தனர். குடும்பத்தோடு சுற்றுலா நோக்கில் வந்தவர்கள், தனியாக வந்தவர்களை மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு கட்சியினர் கலைந்து சென்றனர். இருந்தாலும் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.