மாவட்ட செய்திகள்
தஞ்சை புகழ் பெற்ற “சிவகங்கை பூங்கா”

தஞ்சை புகழ் பெற்ற “சிவகங்கை பூங்கா” ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 5 கோடியே 80 லட்சம் மதிப்பில் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவை போல் உருவாக்க பணிகளை துவக்கி வைத்தார் தஞ்சை மாநகர மேயர் சண்.இராமநாதன்.
4 மாதங்களில் மக்களின் பயன்பாட்டிற்காகு வரும் என மேயர் தெரிவித்தார்.

புகழ் பெற்ற தஞ்சை சிவகங்கை பூங்கா கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டிற்க்கு இல்லாமல், முடங்கி இருந்த நிலையில் மீண்டும் பொழிவுடன் செயல்படும் வகையில் மாநகராட்சி சார்பில் 5.80 கோடி திட்ட மதிப்பீட்டில் , தொல்லியல் துறையின் அறிவுறுத்தலின் படி , இயற்கை அழகு மிளிர பூங்காவாக மாற்றும் பணி இன்று முதல் துவங்கியது.இப்பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் பேட்டி அளித்த மேயர் சண்.இராமநாதன்.
பாரம்பரியமிக்க சிவகங்கை பூங்கா மீண்டும் புது பொழிவு பெறும் வகையில் பணிகளை துவக்கியுள்ளோம். பெரிய கோயிலின் அருகில் உள்ளதால் தொல்லியல் துறையின் அறிவுறுத்தலின் படி சிறுவர்பூங்கா, நடைபாதை, மூலிகை செடிகள் நடப்பட்டும்,

அழகிய செடிகள் வைக்கப்பட்டும் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா போல இயற்கை அழகை ரசிக்கும் வகையில் அமையவுள்ளது. இப்பணிகள் 4 மாதத்தில் நிறைவு பெறும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
