மாவட்ட செய்திகள்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் காவிரி நீர் தடையின்றி கிடைக்க பரத்வாஜ் சுவாமிகள் சிறப்பு பூஜை.

சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் இன்று திருச்சி வருகை புரிந்தார். திருச்சி அம்மா மண்டபம் பகுதியில் தங்கி இருக்கும் அவர் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தினார். காவேரி நீரை ஒரு சங்கில் பிடித்து வைத்து மந்திரங்கள் ஓதி சுமார் ஒரு மணி நேரம் சிறப்பு பூஜை நடத்தினர்.
இதுகுறித்து பரத்வாஜ் சுவாமிகள் கூறும்பொழுது
நீரின்றி உலகம் இருக்காது உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உலகில் உள்ள மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், அவர்களுடைய வாழ்வாதாரம் நல்ல முறையில் செழிக்கவும், மக்களுக்கு இன்றியமையாத தேவையாக இருக்கும் நீர் தங்கு தடையின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இன்று காவிரி நீரை சங்கில் நிரப்பி வைத்து பூஜை செய்யப்பட்டது.

நீருக்கு முக்கியத்துவத்தை அனைவரும் உரை வேண்டும் என்பதை உணர்த்த தான் சிவபெருமான் தலையில் கங்கையை வைத்திருப்பார். எனவே நம்முடைய வாழ்க்கைக்கும் வாழ்வாதாரத்திற்கும் உறுதுணையாக இருக்கும் நீரை நாம் போற்ற வேண்டும். நீரை மதித்தால் தான் அது நம்மை மதித்து வரும். எனவே பொதுமக்கள் அனைவரும் நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். கங்கை எப்படி வற்றாமல் கரை புரண்டு ஓடுகிறதோ, அது போல காவிரி நீரும் வருங்காலத்தில் வந்தாமல் பாய்ந்து ஒடி மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக தான் இந்தபூஜையை செய்தேன். இந்த பூஜையை செய்வதன் மூலம் வருங்காலத்தில் காவேரியில் தங்குதடையின்றி தண்ணீர் செல்லவும், அதனை லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்தவும், பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தவும் நீரை அதிக அளவு வழங்க வேண்டும் என்று காவேரி தாயிடம் வேண்டிக் கொண்டேன் என்று கூறினார். பிறகு
10விளக்கு பூஜை செய்யப்பட்ட காவேரி நீர் வழங்கப்பட்டது. பூஜையில் திருவரங்கம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
