மாவட்ட செய்திகள்
மாதவரத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம்.

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் தெற்கு, வடக்கு பகுதி திமுக சார்பில் சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் மதிவாணன், ராமகிருஷ்ணன், ஜி.துக்காராம், பரந்தாமன், மாமன்ற உறுப்பினர்கள், வட்ட செயலாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES சென்னை
