மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடியில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடியில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவரிடமிருந்து செல்போனை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி நரிக்குறவர் காலனி சேர்ந்தவர் ஜிப்பி (47). இவர் கடந்த 22ம் தேதி வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த ஒருவர் ஜிப்பியிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து ஜிப்பி செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பிடாரி கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் மணிகண்டன் (20) என்பவர் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ரத்தினசாமி மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்து 6 மொபைல் போன்கள், ரெண்டு சாதாரண செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.