மாவட்ட செய்திகள்
நகை கடன் தள்ளுபடி ஆகவில்லை என கூறி கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது இச்சங்கத்தில்
900 மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். 800க்கும் மேற்பட்டோர் தங்கள் நகைகளை அடமானம் வைத்து உள்ளதாக தெரிய வருகிறது .தமிழக அரசு குடும்பத்தில் 1 ஐந்து சவரனுக்கும் குறைவாக நகை கடன் பெற்றவர்கள் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான அரசாணை வெளியிட்டது இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றவர்களில் 343 பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற அறிவிப்பினை அங்கு உள்ள விளம்பர பலகையில் ஒட்டப்பட்டது இதனை அறிந்து அங்கு கிராம மக்கள் தாங்கள் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளனவா என்று பார்த்தபோது பலரது நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில்
அங்கு குவிந்த 200க்கும் மேற்பட்டோர் நகைகளை அடமானம் வைத்திருந்தவர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அங்கு வந்த சரக கூட்டுறவு பதிவாளர் மற்றும் காவல்துறையினர் அதிகாரிகள் வந்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இதுகுறித்து மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும் அதில் உரிய பயனாளிகள் இருந்தால் சேர்க்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் 300க்கும் மேற்பட்டோருக்கு நகைகள் அடமானம் வைத்துள்ளோம் ஆனால் நகைகள் வைத்ததற்கான பணம் எதுவும் எங்களுக்கு கொடுக்கப்படாமல் தற்போது வங்கியில் நிதி இல்லாததால்
பாண்டு பேப்பர் மட்டும் கொடுத்தனர்.
பின்னர் மீண்டும் பலமுறை அடகு வைத்த நகைகள் பணம் கேட்கும் போதெல்லாம் பணமில்லை என்று கூறி வந்த நிலையில் தற்போது நகை கடன் தள்ளுபடி பயனாளிகள் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை ஆனால் பணமே வாங்காமல் நகைகளை வைத்த எங்களுக்கு வடிகட்டி நகைகளை மிக்க சொல்வது மோசடி என கூறுகின்றனர் கிராம மக்கள்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணமே தராமல் நகைகளை வைத்த பயனாளிகளுக்கு நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.