மாவட்ட செய்திகள்
தஞ்சையில் அ.ம.மு.க. சார்பில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு.
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோடை காலத்திற்கான தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தஞ்சை கரந்தை பகுதி 7-வது வார்டு சி.ஆர்.சி. டெப்போ எதிர்ப்புறம் உள்ள பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
மாநகர மாவட்ட அவைத்தலைவர் விருதாச்சலம், பூச்சந்தை பகுதி கழக செயலாளர் செந்தில்குமார், 36-வது வார்டு மாநகர கவுன்சிலரும், வழக்கறிஞருமான கண்ணுக்கினியாள், தலைமை நிலைய செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், மாநில இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் சித்திரா அங்கப்பன், கரந்தை பகுதி கழக செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள் கீதா, அனிமிக் கார்த்தி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.