BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 0 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 0 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்துக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 13ம்தேதி வரையில் 0 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
இந்த முகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, இலவச அறுவை சிகிச்சை, உதவி உபகரணங்கள்,கல்வி மற்றும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவைகள் வழங்கப்படவுள்ளது.

இது குறித்து பொதுமக்களுக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பள்ளி மாணவர்கள் மூலமாக அந்தந்த பகுதிகளில் பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த பேரணியை பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் ஒன்றிய குழுத்தலைவர் கவிதா கோவிந்தராஜ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

மேள தாளங்கள் முழங்க நகரின் முக்கிய வழியாக சென்ற பேரணியில் மாற்றுத்திறனாளிகளை மதிப்போம், பாதுகாப்போம், என்கிற முழக்கங்களை எழுப்பினர்.இதில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )