மாவட்ட செய்திகள்
கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி வெட்டிக்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 7 வது தெருவை சேர்ந்தவர் மணி(50) இவர் மேல் 10 வருடங்களுக்கு முன்பு கங்கை கொண்டான் அருகே வடகரை நடந்த கொலை வழக்கு தொடர்பாக தண்டனை பெற்று தற்போது தண்டனை காலம் முடிந்து கேவில்பட்டியில் பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலையில் தனது மாட்டுத் தொழுவில் வைத்து பால் எடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.


பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மாட்டு தொழுவத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி துணை ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட மணிக்கும் கொலை செய்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
