BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் 201 பயனாளிகள் ரூ.9,32,550 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சியில் 201 பயனாளிகள் ரூ.9,32,550 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம். மணல்மேடு பேரூராட்சி எம்.ஏ.கே திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 150 குடும்பங்களுக்கு அடையாள அட்டையும், வருவாய் துறையின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா 16 நபர்களுக்கும், மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை 25 நபர்களுக்கும், வேளாண்மைத் துறை 4 சார்பில் 6 விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மா கன்றுகளையும் ஆக மொத்தம் ரூ.9,32,550 மதிப்பில் 201 பயனாளிகளுக்கு மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார்.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது. மற்றும்

மாண்புமிகு தமிழக முதல்வர் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாண்புமிகு முதலமைச்சர் அறிவித்த மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத்திட்டம் இன்று நாடு முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அவர்கள் வழியிலேயே ஆட்சி செய்யும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் எல்லோருக்கும் எல்லாத் திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்வி, பொருளாதாரம், மகளிர் சுயஉதவிக்குழு போன்ற திட்டங்கள் தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலஇலவச கல்வித்திட்டம் தமிழகத்தில் தான் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உயர்க்கல்வி பயின்று வருவோரின் எண்ணிக்கை 52 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் உள்ள வடமாநிலங்களில் 25 சதவீதமாக உள்ளது. திராவிட இயக்கம் குறிப்பாக கலைஞர் பள்ளியில் படித்தவர்கள் உயர்க்கல்வி பயில் ஆட்சியில் தான் அரசு 5 சதவீத்ம இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் பெண்கல்வி முன்னேற்றத்திற்காக 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியிலே படித்துவிட்டு 88-49-88 மற்றும் பாலிடெக்னிக் சேரும் மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உயர்க்கல்வியில் 6 இலட்சம் மாணவ,மாணவிகள் படிக்க இருக்கின்றனர். இதுஒரு அற்புதமான திட்டமாகும்.

ஒரு பெண் படித்தால் அது பல்கலைக் கழகத்திற்கு சமம். ஊரகப் பகுதிகளைப்போல நகர்ப்புற பகுதிகளிலும் 100 நாள் வேலைத்திட்டம் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒன்றிய அரசின் நிதி இல்லாமல். முழுக்க முழுக்க மாநில அரசின் நிதி உதவியுடன் பேரூராட்சி பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் மணல்மேடு பேரூராட்சியில் 1905

குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 1755 குடும்பங்களுக்கு ஏற்கனவே அடையாள வழங்கப்பட்டுள்ளன. இன்று 150 அட்டை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் மணல்மேடு பேரூராட்சியில் இராஜசூரியன்பேட்டை, சின்ன இலுப்பப்பட்டு. இராதாநல்லூர் ஆகிய பகுதிகளில் குளம் வடிகால் வாய்க்காலினை ஆழப்படுத்தி தூர்வாரி சீரமைக்கப்பட உள்ளன. மணல்மேடு பேரூராட்சியில் நிறைய பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ. 48.00 இலட்சம் செலவில் பேவர் பிளாக் போடும் பணியும், மக்கும் குப்பை. மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக்கை யாரும் பயன்படுத்தக்கூடாது. பேரூராட்சி பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி தங்கு தடையின்றி செய்து தரப்படும். தூய்மையான பேரூராட்சியாக மணல்மேடு பேரூராட்சி மாற்றப்படும். இங்குள்ள சார்பதிவாளர் அலுவலகம் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் பார்க் கொண்டு வரப்படுவதற்கு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இங்குள்ள நூற்பாலை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று துபாய் சென்று அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கிறார். அதன் மூலம் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகும். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களில் தமிழக முதலமைச்சர் தான் சிறந்த முதலமைச்சராக செயல்படுகிறார். இவ்வாறு மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பேசினார்.

முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா. எம். முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் சேகர், மணல்மேடு பேரூராட்சித் தலைவர் அ. கண்மணி, மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி, மணல்மேடு பேரூராட்சி செயல் அலுவலர் க.தமிழ்ச்செல்வன் அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீர பாண்டியன் அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர்ப்புற வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )