மாவட்ட செய்திகள்
தேனியில் இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது .

தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து கர்ப்பிணி பெண்கள், விபத்தில் பாதிக்கப்பட்டோர் மேலும் பலரும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரத்தத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாவட்ட தலைவர் நெட்.Dr.தியாகராஜன் தலைமையில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுருளி வேல் பொருளாளர் முகமது அலி ஜின்னா குழு உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் இந்த ரத்ததான முகாமில் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் கல்லூரி மாணவ மாணவிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ரத்ததானம் வழங்கி சிறப்பித்தனர் ரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் தேனி அரசு மருத்துவமனை சார்பில் சிறப்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த ரத்ததான முகாமில் ரத்த மாதிரிகளை சேகரிக்கும் பணியினை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ரத்ததான முகம் சிறப்பு மருத்துவர் அனுமானந்தன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ரத்த நாளங்களை சேகரித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
