மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கோடை காலம் வெயில் கொளுத்தி வருகின்றன.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டார பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கோடை காலம் வெயில் கொளுத்தி வருகின்றன. இதனையடுத்து வாழை விவசாயிகள் தங்களது வாழை மரங்களுக்கு பல்வேறு காரணங்களால், போதிய தண்ணீரை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாமல், வாழை மரங்கள் மிகுந்த சேதம் அடைந்துள்ளன.
மடத்துக்குளம் வட்டாரப் பகுதியில் உள்ள தண்ணீரின்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை, கணக்கெடுப்பு செய்து, மடத்துக்குளம் வட்டார வேளாண் அலுவலர்கள் மூலம், மாவட்ட வேளாண் அலுவலகத்தின் சார்பில், போதிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
