BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரம்- கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமையில் கூட்டுறவு சங்கம் வங்கிகளில் ஐந்து பவுன் நகை தள்ளுபடிக்கான சான்றிதழ் , மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்வு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி
கழக துணைப் பொதுச் செயலாளரும்,கூட்டுறவுத்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி அவர்களின் ஆலோசனையின்படி
திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும்,உணவுத்துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமையில் இன்று தமிழக அரசின் பொதுநகை கடன் தள்ளுபடித் திட்டம் 2021, கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் வரை நகை அடமானம் வைத்து உள்ளவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள், கால்நடை வளர்ப்பிற்கான நடைமுறை மூலதனக் கடன் மற்றும் மகளிர் சுய உதவி குழு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட கடன் உதவிகளை தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் பொருளுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பயனாளிகளுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சி.ராஜாமணி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், ஒன்றிய கழகச் செயலாளர் க.தங்கராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கா.பொன்ராஜ் ,ஒன்றிய குழு பெருந்தலைவர் சத்யா புவனா, ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் பிசி.தங்கம் ,கூட்டுறவு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்,ஒன்றியக் குழு உறுப்பினர்,கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் இயக்குனர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள்,துணைத் தலைவர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பயனாளிகள் பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )