மாவட்ட செய்திகள்
திருச்சி அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்து மாலை போட்டு விட்டு சென்ற கொலை கும்பல்.

திருச்சி அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை செய்து மாலை போட்டு விட்டு சென்ற கொலை கும்பல் – சம்பவ இடத்தில் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கௌரிசங்கர். இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை என குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன. பிரபல ரவுடி குணா சுந்தரபாண்டி இவர்களுடன் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்நிலையில் 7 பேர் கொண்ட கும்பல் கௌரிசங்கரை தொடர்பு கொண்டு பிறந்தநாள் ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு கௌரிசங்கர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து வெங்ககுடியில் தேங்காய் நார் தொழிற்சாலையில் இருக்கிறேன் என கூறியுள்ளார். 7பேர் கொண்ட கும்பல் தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ஆசிர்வாதம் வாங்குவது போல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரிசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பின்னர் வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கௌரி சங்கரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில்
தீருச்சி எடதெருவை சேர்ந்த கார்த்திக் என்பவரின் பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்குவதற்காக கிளியநல்லூர் சித்தார்த் உள்ளிட்ட
7 பேர் தேங்காய் நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கரி கொன்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும், பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி அவர்களின் கூட்டாளி பிரவீன் நேற்று கொலை செய்யப்பட்டு இறந்த நாள் அதே நாளில் அவருடைய நண்பர் கௌரிசங்கரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்,மற்றும் காவல் துனை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் ராமேஷ் நேரில் ஆய்வு செய்து,விசாரித்து வருகின்றனார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
