மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைபாடுகளை நீக்க இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்றுவித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஜேசிஐ, நிறுவனத்தின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பெரியகுளம் பகுதியில் வடுகபட்டி, ஜெயமங்கலம் சில்வார்பட்டி தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்
100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கொரோனா பொதும் முடக்கத்தால் மாணவர்களிடையே கற்றல் திறன் குறைபாடுகளை நீக்க தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் பயிற்றுவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று ஜெசிஐ என்ற நிறுவனத்தின் சார்பில் தன்னார்வலர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டு இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார், தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா உள்ளிட்டோர் மற்றும் இந்நிகழ்ச்சியில் ஜெசிஐ நிறுவனத்தின் தலைவர் புவனேஸ்வரி செயலாளர் லோகேஷ் குமார் திட்ட இயக்குனர் தினேஷ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
