BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்குன்றத்தில் இலவச இருதய பரிசோதனை, பொதுமருத்துவம், கண் பரிசோதனை முகாம்.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம், செங்குன்றம் ரிலா எம்.எஸ். மருத்துவமனை. சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை, ரெட்ஹில்ஸ் நண்பன் இணைந்து இலவச இருதய பரிசோதனை, பொது மருத்துவ முகாம், கண் பரிசோதனை முகாம் செங்குன்றம் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் நண்பன் எம்.அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது.

செங்குன்றம் பேரூர் கழக திமுக செயலாளர் ஜி.ராஜேந்திரன், துணைச் செயலாளர்கள் ஆர்.சீனிவாசன், எஸ்.முனீஸ்வரி சுகுமார், ஒன்றிய பிரதிநிதி கே.சுந்தரம், என்.அப்துல் சமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்இஆர்.விப்ரநாராயணன், கவுன்சிலர்கள் 3வது வார்டு என்.சகாதேவன், 4வது வார்டு எஸ்.கார்த்திக் கோட்டீஸ்வரன், 8வது வார்டு வினோதினி பாலாஜி, 10வது வார்டு பா.கோமதி பாஸ்கர், 14வது வார்டு கு.மோகன் (எ) இலக்கியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் பொருளாளர் ஏ.கே.முகம்மது யூசுப், சேவை திட்ட இயக்குநர் கோகுல் எஸ்.வைதீஸ்வரன், இணைச் செயலாளர்கள் ஷாநவாஸ், மார்ட்டின், ஹேமந்த், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம், மாவட்டத் தலைவர் பாலாஜி, சி.மணிகண்டன், சிலம்பரசன், பி.எல்.சரவணன் உள்ளிட்ட பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செங்குன்றம் ரிலா எம்.எஸ். மருத்துவமனை சார்பில் 150 பேருக்கு உயரம், எடை, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு, இருதயம் தொடர்பான இசிஜி, எஃகோ கார்டியோ ஆகிய பரிசோதனைகளும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

சங்கரா நேத்ரலயா கண் மருத்துவமனை சார்பில் 95 பேருக்கு இலவச கண் பரிசோதனையும் 59 பேருக்கு இலவச கண் கண்ணாடி, 20 பேர் கண் ஆபரேஷனுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )