மாவட்ட செய்திகள்
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினர் 40 பேர் கைது.
தஞ்சாவூர் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து மார்ச் 28, 29, ஆகிய இரு தினங்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திற்க்கு அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் எஸ்.எம்.ராஜேந்திரன் தலைமையில் ரயில் மறியல் செய்ய முயன்ற போது 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் முன்னதாக ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர்கள் விரோத செயல்பாட்டை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.