மாவட்ட செய்திகள்
உடுமலையில் அதிகாலையில் விபத்து காமராஜர் சிலை பகுதியில் பால் வண்டிமோதி விபத்து.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழைய பஸ் நிலையம் பகுதியில் காமராஜர் சிலை உள்ளது சிலையை சுற்றி கம்பி வேலிகள் போடபட்டு உள்ளது.
இந்த நிலையில் அதிகாலை 3 மணி யளவில் பால் வண்டி ஓன்று தாராபுரத்தில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பழைய பஸ் நிலையம் பகுதியில் வளைவில் திரும்பும் பொழுது காமராஜர் சிலை அமைக்கப்பட்ட இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்து உள்ளே புகுந்தததால் தடுப்புக் கம்பிகள் மட்டும் சேதமடைந்தன காமராஜர் சிலைக்கு எந்தவித சேதமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்