மாவட்ட செய்திகள்
இந்தியா முழுவதும் இன்று அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் இன்று அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் கம்யூனிஸ்ட் விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ், திமுக ஆதரவு அனைத்து தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் பல வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை – திருச்சி மத்திய பேருந்து நிலையம் ,சத்திரம் பேருந்து நிலையத்திற்கு பல்வேறு கிராமப்புற பகுதிகளில் இருந்து இன்று காலை இயக்கப்படும் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மணப்பாறை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், சமயபுரம், போன்ற புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறைவு – தனியார் பேருந்துகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.
இதே போல் மத்திய பேருந்து நிலையத்திலும் 60% அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இன்று அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தை ஒட்டி திருச்சியில் 1500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.