BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி ஊழியர்கள் ஆர்பாட்டம்.


நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது, இதைப்போல் தஞ்சாவூரில் எல்ஐசி ஊழியர்கள், எல்ஐசி முகவர்கள் ஆகியோர் எல்ஐசி கோட்ட அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய்ய வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் ,
தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

 

அங்கன்வாடி,‘ஆஷா’ ஊழியர்கள், மதிய உணவு ஊழியர்களுக்கும் இதரத் திட்ட ஊழியர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )