BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அரூர் அருகே கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாய் கொள்ளை. போலீசார் விசாரணை.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தில் உள்ள ஏக்கிழிச்சி மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் மற்றும் அம்மன் கழுத்தில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

நேற்று இரவு கோவிலில் மின் விளக்குகளை எரி விட்டு சென்ற பூசாரி காலை வந்து பார்க்கும் பொழுது மின் விளக்கு எரியாமல் இருந்ததால் சந்தேகமடைந்து கோவில் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள மெயின் கேட்டை திறந்து பார்த்தபோது மறுபக்கம் இருந்த கேட்டில் பூட்டப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாகவும் உண்டியல் உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்பு ஊர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த அரூர் காவல்துறையினர் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த திருட்டு சம்பவத்தில் சுமார் 4 பவுன் தங்க நகைகள் மற்றும் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என கோவில் பூசாரி தெரிவித்தார்.


மேலும் இந்த கோயிலின் அருகே சந்து கடைகள் மற்றும் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாகவும் வெளியூரில் இருந்து வரும் நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தை செய்திருக்கலாம் என கோவில் பூசாரி தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )