மாவட்ட செய்திகள்
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஊழியர்கள் சாலை மறியல்.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஊழியர்கள் சாலை மறியல்
நாடு முழுவதும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது, இதைப்போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியும் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பலரும் திரண்டனர்.

அவர்கள் சிறிது தூரம் நடந்து சென்று அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோதச் சட்டங்களாக மாற்றியதை ரத்துசெய்ய வேண்டும், அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகள் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் ,தேசியப் பணமாக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் .

இதரத் திட்ட ஊழியர்களுக் கும் குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் முறைசாராத் தொழிலாளர்கள் அனைவருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதில் ஏஐடியுசி மாவட்ட துணை தலைவர் தமிழரசன், ஐ என் டி யு சி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், சி ஐ டி யு மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, சிஐடி யூ மாவட்ட குழு தெய்வேந்திரன், பொன்ராஜ், பரமசிவம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
