மாவட்ட செய்திகள்
மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும் ஐஎன்டியுசி, தொமுச, ஏஐடியுசி, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கம், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட திமுகவின் ஆதரவு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.


இதன் ஒரு பகுதியாக திருச்சியில் அனைத்து வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் சார்பில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்
திருச்சி மாவட்ட பொது செயலாளர் ராமராஜ் தலைமையில் திருச்சி ஒத்தக்கடை இந்தியன் வங்கி அலுவலகம் முன்பு 100க்கு வங்கி ஊழியர்கள் பணி புறக்கணித்து மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
