BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் சிஐடியு சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் சிஐடியு சார்பில் மக்கள் விரோத தொழிலாளர் விரோத தேசவிரோத கொள்கையை கடைபிடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த மறியல் போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் கோஷங்கள் எழுப்பி தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை மறுக்கும் மின்சார சட்டம் 2020 ஐ – ரத்து செய்ய வேண்டியும் தொழிலாளர்களின் 44 சட்டங்களை நான்கு தொகுப்புகளாக மாற்றிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டியும் வேளாண் விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்யும் சட்டத்தை ஏற்றிடவேண்டும் என உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகள் முக்கிய அம்சமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )