மாவட்ட செய்திகள்
அமமுக தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் சார்பில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டம்.

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட அமமுக சார்பில் கட்சி வளர்ச்சி குறித்த நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் தஞ்சாவூர் பர்மா காலனி உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் கட்சியின் தஞ்சை மாநகர் மாவட்டச் செயலாளர் ப.ராஜேஷ்வரன் தலைமை வகித்தார். கழக துணை பொதுச்செயலாளர் எம.ரெங்கசாமி , பங்கேற்று கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் கழக தலைமை நிலைய செயலாளர் முன்னாள் அமைச்சர் திருப்பூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. C. சண்முகவேலு, கழக அம்மா பேரவை செயலாளர் திரு. K. டேவிட் அண்ணாதுரை கலக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் செயலாளர் வேலு. கார்த்திகேயன் கழக சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவு மற்றும் விழிப்புணர்வு மற்றும் மாநில, மகளிர் அணி ,தகவல் தொழில்நுட்ப பிரிவு ,தஞ்சை மாநகர் மகளிர் அணி,பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ,மகளிர் அணி ,மாநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
