மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி யிலுள்ள சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நிகழ்ச்சி.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி யிலுள்ள சிவசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுப்பிரமணி செல்வேந்திரன் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும்,
செந்தில்குமார் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளராகவும், சூர்யா இளைஞர் அணி நகர உறுப்பினராகவும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.


இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குரு ஐயப்பன் தலைமை வகித்தார், மாநிலச் செயலாளர் முனீஸ்வரன் முன்னிலை வகித்தார், மாவட்ட பொதுச்செயலாளர் கருப்பையா, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் , மாவட்ட பொருளாளர் கணேசன், மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
