மாவட்ட செய்திகள்
பள்ளி மாணவி மர்மச் சாவு.


உடுமலையில் பரபரப்பு: உடுமலை சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்தவர் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் இந்த மாணவி நேற்று வகுப்புகள் முடிந்த நிலையில் மாலை வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இரவு 7 மணியளவில் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டிற்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். வீடு திரும்பிய இவரது பெற்றோர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் உடுமலை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்தார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என உடுமலை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருப்பூர்
