BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன பணியில் இல்லாத போக்குவரத்து கழக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு.

அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நேற்று தொடங்கி இன்று 2-வது நாளாக நீடிக்கிறது தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலை 60 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர் இதையடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்அதிகாரிகளுடன் தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்து பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுத்தார் இதையடுத்து 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதால் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று
தஞ்சை நகர கோட்டத்தில் இயக்கப்பட்டு வரும் 96 பேருந்துகளில் தற்போது வரை 93 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன 8 மணிக்கு மீதமுள்ள 3 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் புறநகரில் இயக்கப்பட வேண்டிய 42 பேருந்துகளில் 42 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டம் முழுவதும் காலை 8 மணி நேர நிலவரப்படி 456 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தற்போது வரை அனைத்து பேருந்துகளும் சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் தஞ்சாவூர் பழைய புதிய பேருந்து நிலையங்கள் கும்பகோணம் பட்டுக்கோட்டை ஒரத்தநாடு திருவையாறு உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பிரச்சனையும் இல்லை.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )