BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பாகுபாடின்றி ஆக்கிரமிப்பு அகற்றம் தஞ்சை – நாஞ்சிக்கோட்டை சாலை விரிவாக்கம் பணி 2 மாதத்தில் முடியும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேட்டி.

தஞ்சாவூா் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், தஞ்சாவூா் – கறம்பக்குடி சீதாம்பாள்புரம் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதில் அண்ணா நகா் – நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை இடையே 2.50 கி.மீ தொலைவுடைய, தற்போதுள்ள இரு வழித்தட சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது தஞ்சை நகரை இணைக்கக்கூடிய சாலையாக நாஞ்சிக்கோட்டை சாலை அமைந்துள்ளது.

இருவழி சாலையாக இருந்ததை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநீா் தேங்காத அளவுக்கு நடைபாதையுடன் கூடிய வடிகால் சாலையின் இரு புறமும் அமைக்கப்படுகிறது. இதற்காக 25-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வீடுகள் பகுதியளவில் இடிக்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பணிகள் சுமார் 8 கோடி செலவில் நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் 2 மாதத்துக்குள் முடிவடையும். ஆக்கிரமிப்புகள் எந்தவித பாகுபாடுமின்றி அகற்றப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )