மாவட்ட செய்திகள்
விவசாய பாசன வசதிக்காக சாத்தனூர் அணை திறந்துவைத்த பொதுப்பணித்துறை அமைச்சர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஆணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 97.50 அடி உள்ள நிலையில் தமிழக முதல்வர் உத்தரவின்படி விவசாய பாசன வசதிக்காக வினாடிக்கு 300 கன அடி வீதம் 4/4/22 இன்று முதல் 19/5/22 வரை மொத்தம் 45 நாட்களுக்கு விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலையில்
நெடுஞ்சாலை துறை மற்றும் பொது பணித்துறை அமைச்சர் எ.வா.வேலு திறந்து வைத்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்காக அணை திறக்கப்பட்ட நிலையில் இதன் மூலம் வலதுபுற கால்வாய் வழியாக செல்லும் நீரால் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 7543 ஏக்கரும் இடது புற கால்வாய் வழியாக செல்லும் நீரால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.