BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர் செயின்ட் ஜோசப் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் என் ரூட் தொழில்நுட்ப மையம், பிரிட்ஜ் பாரத் மற்றும் லைப் அகாடமி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஆற்றல் நெருக்கடி மற்றும் திறன் மேம்பாட்டு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா.

தஞ்சாவூர் செயின்ட் ஜோசப் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் என் ரூட் தொழில்நுட்ப மையம், பிரிட்ஜ் பாரத் மற்றும் லைப் அகாடமி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஆற்றல் நெருக்கடி மற்றும் திறன் மேம்பாட்டு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திரு. சரவணகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.என் ரூட் குழும நிறுவனர் விங் கமாண்டர் திரு. ஜெயக்குமார் விளக்க உரை ஆற்றினார். பிரிட்ஜ் பாரத் முதன்மை செயல் அலுவலர் கர்னல் திரு. செல்வகுமார், டெல்டா புட்ஸ் நிர்வாக இயக்குனர் முனைவர் பர்வின், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் திரு. சரவணகுமார் அவர்கள் செயின்ட் ஜோசப் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் தொழில்முனைவு மற்றும் புதுமைக்கான அடைகாக்கும் மையத்தினை (இன்குபேசன் சென்டர்) குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள். மேலும் செயின்ட் ஜோசப் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் என் ரூட் தொழில்நுட்ப மையம் சார்பில் இணைத்து ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி நிர்வாகி சிஸ்டர் ஆரோக்கிய ஜானி ராணி, மைக்கேல் அகடமி இயக்குனர் ஃபாதர் மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் டாக்டர் சண்முகசுந்தரம் வரவேற்றார். என் ரூட் குழும இணை நிறுவனர் திருமதி. தீபா ஜெயக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )