BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

வண்டலூரில் செயற்கை நீருற்று, குளியல் தொட்டிகள் !! உல்லாசக் குளியல் போடும் விலங்குகள், பறவைகள்!!

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் சிங்கம், புலி, யானை உட்பட சுமார் 3000க்கும் மேற்பட்ட வன விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 10000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோடை வெயில் அதிகரித்து வருவதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் விலங்குகள், பறவைகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குரங்குகள், மயில்கள் உட்பட பறவைகள் மற்றும் வனவிலங்குகள் விளையாடி மகிழ சவுக்கு கம்புகள் வைத்து கட்டப்பட்டுள்ளன. கிளிகளுக்கு ஏணிப்படிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மனித குரங்குகளுக்கு திறந்தவெளி குளியல் தொட்டியும், குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. உணவாக பழங்கள், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் இளநீர் சேர்த்து குளிர்பானங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

பார்வையாளர்கள் இதனை கண்டு ரசிக்கின்றனர். பறவைகளுக்கு இருப்பிடங்களை சுற்றி சணல் கோணிப்பைகள் ஷெல்டர் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஷவர் குளியலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சிங்கம், புலிகளுக்கு நீந்தி குளிக்கும் தொட்டி, யானைகளுக்கு ‌ஷவர் மற்றும் சேற்று குளியலும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
நெருப்புக்கோழி, ஒட்டகச்சிவிங்கிகளுக்கு காலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீரை சுழற்றி அடிக்கும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளான. வனவிலங்குகள், பறவைகள் இதில் உல்லாச குளியல் போட்டு வருகின்றன. பார்வையாளர்களை கவரும் வகையிலும் அவர்களை குளிர்விக்கவும் பாதையின் மேல்பகுதியில் தண்ணீர் சாரல் போல் தெளிக்கப்படுகின்றன. செயற்கை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )