BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தாராபுரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பூச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்திய ஆயிரக்கான பத்தர்கள்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மாரியம்மன் கோவில் வீதியில்  பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளன. இந்த திருக்கோவிலில் ஆண்டு தோறும் பூச்சாட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கடந்த பங்குனி 8ல் பூசாட்டு விழா நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு அன்று கம்பம் நடப்பட்டன. பதினைந்து நாட்களுக்கு முன்னதாக்கவே விழா தொடங்கப்பட்ட நிலையில், அன்று முதல் அமராவதி அற்றிலிருந்து ஏராளமான பத்தர்கள் தீர்த்தம் குடங்களுடன் கொண்டு வந்து கம்பத்தின் மீது ஊற்றி வழிபாட்டுச் சென்றனர்.

அதனை தொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன்பு திருக்கோவில் இந்த விழாவில் பக்தர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கையான நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில், பூச்சட்டி எடுத்தல், வேல் குத்தி பூச்செடி ஏந்தி செல்லுதல், அழகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை அம்மனுக்கு ஏராளமான பத்தர்கள் செலுத்தி வருகின்றனர். இதில் ஏராளமான குழந்தைகள்,பெண்கள், என ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தங்களது நேர்த்திகளை பரவசத்துடன் சாட்டி வந்தனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கோரோனோ போன்ற கொடிய நோயிலிருந்து ஏராளமானோர் மீண்டு வந்த நிலையிலும், தற்போது இந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடணை செலுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )