BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

லயன்ஸ் சங்கங்கள் சார்பில் புள்ளிலைனில் இலவச கண் பரிசோதனை முகாம்.

பாடியநல்லூர், ஆல்ஃபா நெக்ஸ்ட்ஜென், தமிழ்ச் சிங்கம், சென்னை சோசியல், லோட்டஸ் ஷைன், காவாங்கரை, புள்ளிலைன் லயன்ஸ் சங்கங்கள், நேஷனல் லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புள்ளிலைன் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு, சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் ஊராட்சியில் அமைந்துள்ள நேஷ்னல் லோட்டஸ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் பாடியநல்லூர் லயன்ஸ் சங்கத் தலைவர் கா.ஷண்முக சுந்தரம் தலைமையில் நடத்தியது.

புள்ளிலைன் ஊராட்சி அளவிலான மகளிர் குழு கூட்டமைப்பு நிர்வாகிகள் வனிதா, பார்வதி, முருகம்மாள், மீனாட்சி, நிர்மலா ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

பாடியநல்லூர் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பாலாஜி, பொருளாளர் குமார், இயக்குநர் சந்திரசேகர், சிலம்பரசன், தமிழ்சிங்கம் லயன்ஸ் சங்கத் தலைவர் மு.பீலிக்கான், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத் தலைவர் நண்பன் எம்.அபுபக்கர், இயக்குநர் மார்ட்டின், லோட்ஸ் ஷைன் லயன்ஸ் சங்க செயலாளர் முருகானந்தம், பொருளாளர் குமரேசன், புள்ளிலைன் லயன்ஸ் சங்கத் தலைவர் என்.கணேசன், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் மந்திரமூர்த்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புள்ளிலைன் ஊராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.எம். தமிழ்ச்செல்வி ரமேஷ், சமூக ஆர்வலர் ரமேஷ் ஆகியோர் இலவச கண் பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்.

சங்கரா நேத்ரலயா கண் மருத்துவமனை சார்பில் 82 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது- இதில் 11 பேருக்கு ஆபரேஷனுக்கும், 51 பேருக்கு இலவச கண்ணாடிக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )