மாவட்ட செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக்குகள் திருட்டு போன சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிக்கினார்.

தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக்குகள் திருட்டு போன சம்பவத்தில் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சிக்கினார். அவரிடம் இருந்து ஒரே நாளில் 18 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து பைக்குகள் திருடப்படும் சம்பவங்கள் நடந்து வந்தது. முக்கியமாக தஞ்சை பகுதியில் ராஜா மிராசுதார் மருத்துவமனை, புதிய பஸ்ஸ்டாண்ட் பகுதி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்று பைக்குகள் திருடப்பட்டு வந்தன. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கேசவமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பல இடங்களில் பைக்குகள் திருட்டு போன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு நபரின் உருவம் மட்டும் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை போலீஸார் தேடி வந்தபோது நடுக்காவேரி காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய, திருவையாறு அருகே கருப்பூர் காலனி தெருவைச் சேர்ந்த கோபிநாத் (41) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை நேற்று காலை பிடித்து விசாரித்த போது, அவர் மாவட்டம் முழுவதும் பைக்குகளை திருடி அதனை, மணல் திருட்டுக்காக குறைவான விலையில் திருவையாறு பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் நேற்று ஒரே நாளில் திருவையாறு, நடுக்காவேரி, கருப்பூர் ஆகிய இடங்களில் கோபிநாத் விற்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள 18 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கோபிநாத்தை செங்கிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
