மாவட்ட செய்திகள்
வல்லம் அருகே சென்னம்பட்டியில் 8 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.

வல்லம் அருகே சென்னம்பட்டியில் 8 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
வல்லம் அருகே சென்னம்பட்டியில் நத்தத்தில் உள்ள பிள்ளையார், செல்வ விநாயகர், புஷ்களாம்பிகா, செவிட்டு ஐயனார், பத்ரகாளியம்மன், தேரடிக்கருப்பர், முனியாண்டவர், சங்கிலிகருப்பர் ஆகிய கோயில்களில் நேற்று(6ம் தேதி) கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வரர், பூர்ணாஹூதி, தீபாராதனை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 5ம் தேதி காலை 2ம் கால யாக பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடந்தது. இதையடுத்து நேற்று காலை 4ம் கால பூஜை தொடங்கி கடம்புறப்பாடும், காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பிள்ளையார், செல்வ விநாயகர், புஷ்களாம்பிகா, செவிட்டு ஐயனார், பத்ரகாளியம்மன், தேரடிக்கருப்பர், முனியாண்டவர், சங்கிலிகருப்பர் ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ட்ரோன் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு வான வேடிக்கையும், அதனைத் தொடர்ந்து சுவாமி வீதிவுலாவும் நடந்தது. விழா ஏற்பாடுகளை சென்னம்பட்டி கிராமவாசிகள் செய்திருந்தனர்.
படவிளக்கம்:
வல்லம் அருகே சென்னம்பட்டியில் ஐயனார் கோயில் விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
