BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

பழனி -கொளுத்தும் வெயிலை தாக்கு பிடிக்காமல் மாமரத்திலிருந்து பிஞ்சுகள் உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அதன் சுற்று வட்டாரப் பகுதியில் விளைந்த மாங்காய் பிஞ்சுகள் கோடை வெயிலுக்கு தாக்கு பிடிக்காமல் கிளே உதிர்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுபற்றி விவசாயி ஒருவர் கூறுகையில்.

பழனியில் ஆயக்குடி, கோம்பைப்பட்டி, புளியமரத்து செட் ஆகிய பகுதிகளில் மா சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. இங்கு விளையும் மாங்காய்கள் பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மா மரங்கள் பூத்துக் குலுங்கின இதையடுத்து விவசாயிகள் அவற்றுக்கு மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஆனால் தொடர்ந்து பழனி பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைப்பதால் அதனைதாக்கு பிடிக்காமல் மா மரங்களில் இருந்து பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளனா எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோடை மழை பெய்தால் மட்டுமே மா மற்றும் தென்னை மரங்கள் உயிர் பெறும் என்று வேதனையுடன் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )